Saturday, June 16, 2012

வானவில்












மகிழ்ச்சி மழையில்
வானம் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை!

ப்ளாக் அண்ட் ஒயிட் கண்களால்
மழைப்பெண் கண்ட கலர்  கனவு!

மழை உண்ட மகிழ்வில்
மேகம் போட்ட வெற்றிலைப்பாக்கு!

வானக் கல்லூரியில் விண்மீன்
விட்டுச்சென்ற வண்ண ஆட்டோகிராப்!

பூமியின் காதலுக்கு வானம் காட்டிய
பஞ்சவர்ண பச்சைக்கொடி!

நிலமகள் சீதைக்கு வான ராமன்
வளைத்த வண்ண வில்!


Saturday, June 9, 2012

பசலை











பனியுரு காலையில்
விண்மீன் சாலையில்
சிறுபிள்ளை தேடலில்
உறுபசி கூடலில்

பார்த்தேனே உன் கண்மையை
கோர்த்தேனே நம் இரு மெய்யை
பிறிந்தேனே என் இனிமையை
அறிந்தேனே - உன் இன்மையை

இதயம் நையப்பட்டது
கனவு கொய்யப்பட்டது
நெய்தல் நெய்யப்பட்டது
பசலை செய்யப்பட்டது!


Thursday, February 16, 2012

இலக்கணக் காதல்














என் காதலின் உவமை நீ.
உன் காதலின் உவமேயம் நான்.
வாழ்வதே நம் காதலின் உருவகம்.
நீ இல்லாத நான் ஒரு பொருள் எச்சம்!
காதலின் தொல்காப்பியமே..
என்னோடு கலந்து காதலின் ஆகுபெயர் ஆகிவிட வா..

Wednesday, January 25, 2012

திமிர்

அடங்கிப் போதலின் பாலிஷ் செய்யப்பட்ட வெர்படிம் - பணிவு!

புத்த தேவை

புத்தனாவதற்கு தேவை போதி அல்ல. புத்தி!

Saturday, January 7, 2012

தாழ்

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ் -
பள்ளியறைக்கதவில்!


Saturday, December 3, 2011

அகரம்

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு"

என  பாரதி பாடிய வள்ளுவனுக்கு இந்த வலைப்பூ சமர்ப்பணம்!